Posts

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவா் : உயா்கல்வித் துறை அமைச்சா்

Image
விரிவாக படிக்க >>

ஓலா ஸ்கூட்டர்: தீ பிடிக்கும், வெடி வெடிக்கும்.. பாவிஷ் அகர்வால்-ன் விளக்கம்..!

Image
ஓலா ஸ்கூட்டர்: தீ பிடிக்கும், வெடி வெடிக்கும்.. பாவிஷ் அகர்வால்-ன் விளக்கம்..! ஓலா ஸ்கூட்டர்களைத் தயாரிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் சிஇஏ-வான பாவிஷ் அகர்வால் இனி வரும் காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரியலாம், ஆனால் அது மிகவும் அரிதாக நடக்கும் விஷயமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் ஓலா உட்படப் பல முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளின் தயாரிப்புகள் தீ பிடித்து எறிந்த நிலையில், பாதுக்காப்பு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் மத்தியில் இதற்கான விசாரணையைத் துவங்கியுள்ளது. இந்நிலையில் பாவிஷ் அகர்வால் ஓலா எலக்ட்ரிக் நிறுவன கூட்டத்தில் பேசியது மீண்டும் மக்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் தனிப்பட்ட நிறுவன கூட்டத்தில் தீ பிடித்தது குறித்து எழுந்த கேள்விக்கு பாவிஷ் அகர்வால் "எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்வுகள் நடக்குமா என்றால், நடக்கலாம்" என்று பதில் அளித்துள்ளார். ஆனால் பிரச்சனைக்கான தீர்வை ஆய்வு ச

3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?

Image
3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா? அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பின்னர் அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாகவே இருந்து வருகின்றது. பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் ஆர்வத்தினை குறைத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர். எனினும் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கமானது ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். சர்வதேச சந்தையில

தருமபுரி​ பகுதியில் சூறைகாற்றுடன் மழை... வாழைமரங்கள் படு சேதம்!

Image
தருமபுரி​ பகுதியில் சூறைகாற்றுடன் மழை... வாழைமரங்கள் படு சேதம்! தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி , பொம்மிடி, கடத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை சூறைகாற்றுடன் கூடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக கடத்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரது தோட்டத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 200க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழைகள் சேதமடைந்துள்ளது . இதனை தொடர்ந்து கந்தகவுண்டனூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 250க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன. அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, மெணசி, பூதநத்தம், துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்படுள்ள 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவ

சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

Image
சாம்பாரில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர் திருப்பூா் காங்கயம் சாலை ராக்கியாபாளையத்தைச் சோ்ந்தவா் கேசவன். இவா் தனது குடும்பத்தினருடன் உணவருந்த திருப்பூா் குமரன் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல அசைவ உணவகமான மயூரா ஹோட்டலுக்கு திங்கள்கிழமை சென்றுள்ளாா். அப்போது அங்கு உணவருந்தியபோது அவர்கள் வாங்கிய சாம்பாரில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, அவா்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த கேசவன் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு! இந்தத் தகவலின்பேரில் திருப்பூா் மாநகராட்சி தெற்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவி உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினா். இதில், சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, உணவகத்தில் இருந்த சாம்பார், புளிக்குழம்பு, ரசம் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளார். மேலும், பகுப்பாய்வின் முடிவின் அடிப்படையில் கடை உரிமையாளார் மீத

அசானி புயல் எங்கே?.. சென்னைக்கு மேலும் இரு நாட்களுக்கு மழை.. வெதர்மேன் போட்ட குளு குளு போஸ்ட்

Image
அசானி புயல் இந்த அசானியின் காரணமாக ஆந்திராவில் சில மாவட்டங்களுக்கு அதிக மழையை கொடுக்கும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த புயல் இன்று கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பேரவையில் முதல்வர் தகவல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் குறைந்துள்ளது

Image
திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு  துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் போக்சோ  சட்டத்தின்கீழ் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு (2022) மார்ச்  மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றுள் 3,441  வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   மேலும்,  பெண்களுக்கெதிரான குற்றங்களில் மானபங்கம் தொடர்பாக 1,053 வழக்குகளும்,  பெண் கடத்தல் தொடர்பாக 547 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 416  வழக்குகளும், போக்சோ பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3,350 வழக்குகளும்  தாக்கலாகியிருக்கின்றன. ... விரிவாக படிக்க >>