சூப்பர் ஆபர்!! பீர் இலவசம்!! சமையல் எண்ணெய்க்கு சிறப்பு சலுகை!!1445545
சூப்பர் ஆபர்!! பீர் இலவசம்!! சமையல் எண்ணெய்க்கு சிறப்பு சலுகை!! உலகளவில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் 80 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதால் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்களில் ஒரு வாடிக்கையாளருக்கு இத்தனை சமையல் எண்ணெய் பாட்டில்கள் தான் கெடுபிடிகளுடன் விற்பனை செய்தன.இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க, ஜிசிங்கர் பார் மேலாளர்கள் ஓர் உற்சாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது, ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அளித்து, அதே அளவு பீரை பெற்றுகொள்ளலாம் என்பது தான். இந்த அறிவிப்பு குறித்த செய்தி, இணையத்தில் பரவி பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து மதுபான விடுதி மேலாளர் எரிக் ஹாஃப்மேன் கூறுகையில், எங்களது கிச்சனில் சமையல் எண்ணெய் இருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது, அதனைத் தொடர்ந்து நாங்கள் இந்த புதிய ஐடியாவை கண்டுபிடித்தோம். எண்ணெய் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளத...