துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசி ஆளுநர்; பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கவும்: வைகோ வலியுறுத்தல்
துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசி ஆளுநர்; பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கவும்: வைகோ வலியுறுத்தல் கோவை மாநாட்டில் அரசியல் கருத்துகளைப் பேசிய தமிழக ஆளுநர் ரவியை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947ம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார். அதாவது, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டம் என்ன பேசி வருகின்றதோ, டெல்லி முதலாளிகள் என்ன சொல்கின்றார்களோ, அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி, அந்த மாநாட்டில் முன்வைத்து இருக்கின்றார். அப்படியானால், 1947 க்கு முன்பு, இந்தியா என்...