மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு! சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இப்போது ஜூலை மாதத்திலும் DA உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்திற்கான AICPI குறியீட்டின் தரவுக்குப் பிறகு, ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் DA அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இம்முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 4 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். இதன் அடிப்படையில், ரூ.56,900 ஆக இருந்த அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு இனி ஆண்டுக்கு ரூ.27,312 வரை சம்பளம் அதிகரிக்கும். இதற்கு முன்னதாக ஜனவரி 2022 தவணைக்கான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அந்த வகையில், ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த...