அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு!! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!517509361
அண்ணாமலை மீது திடீர் வழக்குப்பதிவு!! காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!! பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசும் குறைக்க வேண்டும் எனவும், இதனை 72 மணி நேரத்திற்குள் அரசு செய்யவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடப்படும்,போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜக சார்பாக பேரணி நடத்தப்பட்டது. அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முதல் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.அப்போது பேரணியில் பேசிய அண்ணாமலை, 'திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து விட்டு,தற்போது அக்கறை இல்லாமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார். கச்சத்தீவை எப்படி மீட்பது என பிரதமர் மோடிக்கு தெரியும் கச்சத்தீவை கனவிலும் கூட திமுகவால் மீட்...