இன்று மழை வெளுக்க போகும் மாவட்டங்கள்!
இன்று மழை வெளுக்க போகும் மாவட்டங்கள்! இன்று வெளியே கிளம்பும் போது மறக்காம குடையுடன் கிளம்புங்க. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. பொதுவாக மார்ச் மாதங்களில் மழை பெய்யாது என்றாலும், இந்த வருடம் மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை காலம் முடிந்தாலும், தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சியால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று மார்ச் 13ம் தேதி தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், புறநகர் மற்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யலா...