நடிகர் விஜய்யின் 66-வது படத்தில், ஜோடி நடிகை மெஹ்ரீன் பிர்சாதா, ராஷ்மிகா மந்தனா?
நடிகர் விஜய்யின் 66-வது படத்தில், ஜோடி நடிகை மெஹ்ரீன் பிர்சாதா, ராஷ்மிகா மந்தனா? நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. இந்தநிலையில், விஜய்யின் அடுத்தப்படமாக, ‘தளபதி 66’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. விஜய்யுடன் இந்த படத்தில் கோலிவுட் மற்றும் டோலிவுட் நட்சத்திரங்களும் உள்ளனர். தற்போது, ’தளபதி 66′ படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இவர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர் ஆவார். தெலுங்கில் பிரபலமான நடிகையான மெஹ்ரீன் பிர்சாதா, பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார். தளபதி 66 படத்தில் மெஹ்ரீன் பிர்சாதாவை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர், இதற்காக அவருடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் விஜய் படத்தில் நடிப்பது குறித்து மெஹ்ரீன் பிர்சாதா ...