Posts

Showing posts with the label #RachithaMahalakshmi #Colorstamil #TVserial

கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி நடிகை: வைரல் ப்ரோமோ

Image
கலர்ஸ் தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி நடிகை: வைரல் ப்ரோமோ கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் ரச்சிதா மஹாலக்ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கி, நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் இது சொல்ல மறந்த கதை. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் ரச்சிதா மஹாலக்‌ஷ்மி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரச்சிதா பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாகவும், தற்போது பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். ரச்சிதா விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர். பின்னர் ஜீ தமிழில் இவர் நடித்த நாச்சியார்புரம் சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது ரச்சிதா மஹாலக்‌ஷ்மி இது சொல்ல மறந்த கதை சீரியலில் வக்கீலாக நடிக்கிறார். இதற்கான ப்ரமோவை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. ...