ச்சோ க்யூட் நயன்! கேரளாவில் மறுவீடு கொண்டாட்டம்! தம்பதி சமேதராய் கோயில்களில் வழிபாடு!358604078


ச்சோ க்யூட் நயன்! கேரளாவில் மறுவீடு கொண்டாட்டம்! தம்பதி சமேதராய் கோயில்களில் வழிபாடு!


எத்தனையோ இடையூறுகளை எல்லாம் தாண்டி, வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இப்போது இல்லற வாழ்க்கையிலும் ஜெயிக்க துவங்கியுள்ளார். திருமணம் முடிந்த கையோடு, மறு வீடு கொண்டாட்டத்திற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ள நயன், தினமும் கேரளாவைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு தம்பதியராக சென்று வருகிறார்கள். 

நயன் - சிவன் திருமணத்தின் போது, சமூக வலைத்தளங்களில், இது எத்தனையாவது காதல், எத்தனை வருஷம் இந்த கல்யாணம் நீடிக்கும் என்று ஏக்கப் பெருமூச்சு கமெண்ட்கள் அதிகளவில் வந்து விழுந்தன. நம் சமூகம் அந்த அளவுக்கு புரையோடி போயிருக்கிறது. ஒரு பெண், இந்த சமூகத்தில் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வது அத்தனை சிரமமாக இருக்கிறது. அதிலும், பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், அந்த பெண்ணை ஏளனம் செய்வதில், சினிமா ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அத்தனை துறைகளிலும் நிறைய ஆண்கள் தங்களது வக்கிர புத்தியைக் காட்டுகிறார்கள். 

இரு காதலும் கல்யாணத்தில் கைகூடாத போது, எத்தனை உடைந்து போயிருப்பாள் என்று யாரும் யோசிப்பதே இல்லை. நடிகை அமலாபால், சமந்தா என அடுத்தடுத்து இப்படி தான், அவர்களாகவே தங்களது தீர்ப்பை எழுதிக் கொண்டிருந்தார்கள். வாழ்த்த மனமில்லை என்றாலும், தூற்றாமல் கடந்து போய் விடுங்கள். 

தமிழ் திரையுலகில் கடந்த 7 ஆண்டுகளாக காதல் பறவைகளாக சிறகடித்து பறந்து கொண்டிருந்த நயன் விக்கி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பில் இருவருக்கும் முதன் முதலாக காதல் அரும்பியது. இவர்கள்  கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

 

இதையடுத்து,ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சரத்குமார் , கேஎஸ் ரவிக்குமார், அட்லி, விஜய்சேதுபதி, விஜய்,  அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகளுன் கலந்து கொண்டார்.

 

திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்தனர். இவர்கள் செருப்பு அணிந்து நடந்தது சர்ச்சையானது. இதையடுத்து, தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், புதுமணத் தம்பதிகள் நயன்தாராவின் பெற்றோரை சந்திக்க கொச்சிக்கு சென்றுள்ளனர்.உடல்நலக் குறைவு காரணமாக அவர்கள் 2 பேரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பெற்றோரிடம் ஆசி பெறுவதற்காக நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். பின்னர் பெற்றோரை சந்தித்து 2 பேரும் ஆசி வாங்கினர். சில நாட்கள் 2 பேரும் கேரளாவில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Comments