100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...
100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...
இவர் சமீபத்தில், கருணாஸ் நடித்த ஆதார் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மேலும் அமீர், பாரதிராஜா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது, அருண் பாண்டியன் பேசுகையில், '' தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையாக பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றனர்'' என்றார்.
பெரும் தொகையை சம்பளமாக பெரும் விஜய் மற்றும் அஜித்:
மேலும் அவர், ''விஜய் அஜித் ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவதாக குற்றம் சாட்டிய அவர் அவர், பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10 % தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் விஜயின் சம்பளம்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சித்திரமாக திகழ்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஆவார்கள். விஜய்யின் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தற்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தின் 190 பட்ஜெட்டில் உருவானது. இதில், விஜய்க்கு மட்டுமே 90 கோடி சம்பளமாக தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வலிமை படத்திற்கு அஜித்தின் சம்பளம்:
அதேபோன்று, அஜித்குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான வலிமை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. வலிமை படத்துக்கு அஜித்திற்கு ரூ.70 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மீண்டும் இவர்களது கூட்டணியில் அஜித் ஏ.கே.61 படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஏ.கே.62 படத்திற்கு அஜித் ரூ.100 கோடி சம்பளம்:
இந்த திரைப்படத்தை முடித்து விட்டு, லைகா நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஏ.கே.62 படத்திற்கு அஜித் ரூ.100 கோடி சம்பளமாக கேட்டாராம். லைகா நிறுவனமோ அவர் கேட்டதை விட 5 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் நயன்தாராவிற்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment