தருமபுரி​ பகுதியில் சூறைகாற்றுடன் மழை... வாழைமரங்கள் படு சேதம்!


தருமபுரி​ பகுதியில் சூறைகாற்றுடன் மழை... வாழைமரங்கள் படு சேதம்!


தருமபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை சூறைகாற்றுடன் கூடிய பெய்த கனமழை பெய்தது. இதன் காரணமாக கடத்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரது தோட்டத்தில் சாகுபடிக்கு தயாராக இருந்த 200க்கும் மேற்பட்டகற்பூர வள்ளி ரக வாழைகள்சேதமடைந்துள்ளது .

இதனை தொடர்ந்து கந்தகவுண்டனூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிரிட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த 250க்கும் மேற்பட்ட கற்பூர வள்ளி ரக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து வாழைத்தார்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதே போன்று பாப்பிரெட்டிப்பட்டி, புட்டிரெட்டிப்பட்டி, மெணசி, பூதநத்தம், துறிஞ்சிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்படுள்ள 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதனால் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில், தற்போது இயற்கை பேரிடரால் 60 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த பெரு நஷ்டத்திற்கு தகுந்த இழப்பீடு தொகை தந்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு வாழை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit

Cookies au quinoa et aux pepites de chocolat