3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?


3 மாத சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா?


அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பின்னர் அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாகவே இருந்து வருகின்றது. பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் ஆர்வத்தினை குறைத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கமானது ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 3 மாத சரிவில் காணப்படுகின்றது. ஸ்பாட் கோல்டின் விலை அவுன்ஸூக்கு 1832.06 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. வலுவான டாலரின் மதிப்பு மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது.

மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அமெரிக்க டாலர், பத்திர சந்தை ஏற்றத்தினால் சற்று சரிவில் காணப்படுகிறது. இன்னும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று மாலை வெளியாகவிருக்கும் டேட்டாவினை பொறுத்து தங்கம் விலை இருக்கலாம்.

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 4787 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து, 38,296 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 64 ரூபாய் குறைந்து, 5222 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 512 ரூபாய் குறைந்து, 42,240 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து, 64.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 648 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து, 64,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Comments

Popular posts from this blog