உடல்நல குறைவு காரணமாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! அறிக்கையில் விளக்கம்1782482201


உடல்நல குறைவு காரணமாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி! அறிக்கையில் விளக்கம்


தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சரத்குமார். ஸ்டார் அந்தஸ்தில் இருந்த சரத்குமார் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்சீரீஸ், திரைப்படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் சரத்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்சத்து குறைப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரத்குமாருடன் நடிகையும், அவரது மனைவியுமான ராதிகாவும், மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் உடனிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும், மேற்கொண்டு சில பரிசோதனைகளும் எடுக்க வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. முழுமையான மருத்துவ சிகிச்சை முடிந்தபிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆவார். இது தொடர்பாக அவரது தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்து கொண்டு இருக்கிறார். யாரும் எந்தவொரு வதந்தியையும்  நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit