நீட் பயிற்சி மையத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!931056468


நீட் பயிற்சி மையத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!!


திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து 16 வயது மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியாா் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் படியூரைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி மணிகண்டனின் மகள் ஆனந்தி (16) படித்து வந்தாா்.

 

இந்த நிலையில், ஆனந்தி வழக்கம்போல பயிற்சி மையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா் பயிற்சி மையத்தின் 3ஆவது மாடிக்கு சென்ற ஆனந்தி அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments

Popular posts from this blog

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்