காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயங்குவதால்! பிரியங்காவை முன்னிறுத்த திட்டம்...1110252337


காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயங்குவதால்! பிரியங்காவை முன்னிறுத்த திட்டம்...


காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல் தயங்குவதால், பிரியங்காவை தலைவராக நியமிக்கும்படி, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.காங்கிரசின் தற்காலிக தலைவராக சோனியா உள்ளார். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.


இதையடுத்து, கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும், கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், மூத்த தலைவர்கள் 23 பேர் போர்க்கொடி துாக்கினர். காங்., செயற்குழு கூட்டத்தை கூட்டி, கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய மேலிடம் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் உட்கட்சி தேர்தல்களை நடத்தி, அதன் முடிவுகளை குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடு இந்த மாத இறுதியில் துவங்கும் என கூறப்பட்டது. இந்நிலையில், கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், ராகுலை நிரந்தர தலைவராக தேர்வு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுல் இதற்கு தயக்கம் தெரிவித்துள்ளார்.


தலைவர் பதவியில் இருக்கும் போது, 2024 லோக்சபா தேர்தலிலும் தோல்வி ஏற்பட்டால், தன் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என அவர் கருதுகிறார். இதனால், தலைவர் பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறார். இதையடுத்து கட்சியில் ஒரு தரப்பினர், பொதுச் செயலராக உள்ள பிரியங்காவை தலைவராக தேர்வு செய்யும்படி குரல் எழுப்புகின்றனர்.

அதேநேரத்தில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முன்னிறுத்தி பிரசாரம் செய்தும், காங்கிரசுக்கு தோல்வி தான் கிடைத்தது. இதனால், பிரியங்காவை தலைவராக்குவது பெரிய அளவில் பலன் அளிக்காது என, மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில், கட்சியினரிடையே குழப்பம் நிலவி வருகிறது.

Comments

Popular posts from this blog