Samantha:அந்த விஷயத்தில் சமந்தாவை முந்திய மாஜி கணவர்


Samantha:அந்த விஷயத்தில் சமந்தாவை முந்திய மாஜி கணவர்


தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவுக்கு பாலிவுட் செல்ல வேண்டும் என்று ஆசை. அதற்கான வேலையில் இறங்கினார். பாலிவுட் வாய்ப்பு வந்தால் ஹோட்டலில் எல்லாம் தங்கக் கூடாது என்று மும்பையில் பங்களா வாங்கும் வேலையிலும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சல்மான் கானின் நோ என்ட்ரி படத்தில் அடுத்த பாகத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் சமந்தாவுடன் சேர்த்து மொத்தம் 10 ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாலிவுட் செல்ல வேண்டும் என்று சமந்தா ஆசைப்பட்ட நிலையில் அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யா தான் முதலில் இந்தி படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆமீர் கானின் லால் சிங் சட்டா படத்தில் அவருக்கு தோழனாக நடித்துள்ளார் நாக சைதன்யா.

டாம் ஹாங்ஸின் ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லால் சிங் சட்டா. நாக சைதன்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியை தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அதன் பிறகே நாக சைதன்யாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
துளி கூட கசியப்படாது: கமல் மகளுக்கு ரகசியம் சொல்ல கிடைச்ச ஆள் யார் தெரியுமா?

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit