Nayanthara:அடேங்கப்பா... இத்தனை கோடிகளா? விக்கி நயனின் சொத்து மதிப்பு.. தீயாய் பரவும் தகவல்!


Nayanthara:அடேங்கப்பா... இத்தனை கோடிகளா? விக்கி நயனின் சொத்து மதிப்பு.. தீயாய் பரவும் தகவல்!


விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் ஹனிமூன்

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகியுள்ளனர். திருமணம் முடிந்த தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடிய விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நேற்று முன்தினம் நாடு திரும்பினர்.

நேராக படப்பிடிப்பு

தாய்லாந்தில் இருந்து நேராக மும்பை சென்ற நயன்தாரா ஷாருக்கானுடனான ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அஜித்தை வைத்து தான் இயக்கவுள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Anirudh: ஆண்ட்ரியாவுடனான காதல் முறிந்தது ஏன்? வைரலாகும் அனிருத் பேட்டி!

ரூ.15 கோடி சம்பளம்

இந்நிலையில் கணவன் மனைவியான இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். ஒரு படத்திற்கு தற்போது 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மரத்தில் சடலமாக தொங்கிய பிரபல வில்லன் நடிகர்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!

சொத்து மதிப்பு

இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக இருவரின் சொத்து மதிப்பும் 215 கோடி ரூபாய் ஆகும். விக்னேஷ் சிவன் தான் இயக்கும் படங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

அடக் கடவுளே... இது என்ன மக்கள் செல்வனுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த மாமனிதன் வசூல்!

வெளிநாட்டில் பிஸ்னஸ்

நடிகை நயன்தாரா துபாயில் மசாலா பொருட்கள் நிறுவனம் ஒன்றிலும், அழகு சாதன பொருட்கள் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

அம்மாவான ஆலியா பட்.. அசந்துபோன பாலிவுட்!

திருமணத்திலும் காசு

அதோடு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமணத்தின் மூலமும் கல்லாக்கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தங்களின் திரைப்பட ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்த நயனும் விக்னேஷ் சிவனும் அதன் மூலம் 25 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடிகை பலாத்கார வழக்கில் கைதான பிரபல நடிகர் உடனடியாக விடுவிப்பு!

Comments

Popular posts from this blog