இதை அப்போவே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது... வாங்கிக்கட்டும் நடிகர்!


இதை அப்போவே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது... வாங்கிக்கட்டும் நடிகர்!



பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தயாரிப்பில் நடித்த நடிகை ஒருவர் புகார் அளித்தார். மேலும் விஜய் பாபு தன்டின மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த விஜய் பாபு நடிகை குறித்த தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவரின் தகவல்களை வெளியிட்டதாக விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய் பாபு வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவர் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு முன்பினை வழங்கிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட விஜய் பாபு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். அதாவது குற்றம்சாட்டுபவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக சமூக ஊடகங்கள் அல்லது மற்ற முறைகள் மூலம் விஜய் பாபு எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில் விஜய் பாபு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்து வாங்கிக்கட்டி வருகிறார். அதாவது என்ன நடந்தாலும் நான் கோபப்பட மாட்டேன். “ஊடகத்தின் எந்த ஆத்திரமூட்டலையும் பொருட்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவின்படி ஊடகங்களுடன் பேசமாட்டேன். விசாரணைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பேன். இறுதியில் உண்மை வெல்லும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், ”என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் “மௌனமே சிறந்த பதில்” என்று ஒரு போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை நீங்கள் ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது என்ற கூறி வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் விஜய் பாபுவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்