அதிர்ச்சி! கல்லூரி மாணவி தற்கொலை! போலீசார் விசாரணை!1689669072


அதிர்ச்சி! கல்லூரி மாணவி தற்கொலை! போலீசார் விசாரணை!


முதலாமாண்டு பி.ஏ. படித்து வரும் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் மீனவர் ஒருவர் மணல் திட்டு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஓகேனக்கல் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் அளித்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், இறந்து போனது தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரனின் மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது. பிரியங்கா, அந்த பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும். பிரியங்கா, கடந்த 2 நாட்களாக காணாமல் போனதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

 

இதனையடுத்து, பிரியங்காவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மாணவி காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டு பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? கல்லூரியில் ஏதேனும் தொந்தரவை சந்தித்தாரா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit

Cookies au quinoa et aux pepites de chocolat