கல்ச்சுரல் கைடுலைன் பிடிக்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் - Netflix நிறுவனம் அதிரடி!


கல்ச்சுரல் கைடுலைன் பிடிக்கவில்லை என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் - Netflix நிறுவனம் அதிரடி!


உலகின் முன்னணி OTT தளமான நெட்ஃபிலிக்ஸ் அதிரடியாக ஒரு அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. ஆனால், இது நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரர்களுக்கு இல்லை. புதிய சந்தா திட்டங்கள், விளம்பரங்கள் ஒளிபரபப்பு, லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் குறைவு என்று கடந்த சில வாரங்களாக நெட்ஃபிலிக்ஸ் பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது. ஆனால், தற்போது புதிய, யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நெட்ஃபிலிக்சின் ஊழியர்களுக்கானது.

கல்ச்சுரல் கைடுலனை புதுப்பித்த நெட்ஃபிலிக்ஸ், அதில் புதிதாக ‘ஆர்டிஸ்டிக் எக்ஸ்ப்ரஷன்’ எனப்படும் ஒரு பிரிவை சேர்த்துள்ளது. இந்த பிரிவில் பல்வேறு பார்வையாளர்களுக்கு எவ்வாறு புரோம்கிராம்களை வழங்குகிறது என்பது பற்றிய விவரங்களை வழங்குகிறது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் சமீபத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்களை இழந்துள்ளது என்ற தகவல் வெளியாகியது.

அதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை குறையாத நெட்ஃபிளிக்ஸ் பங்குகள் மதிப்பு தடாலென்று சரிந்தது. இதன் காரணமாக நெட்ஃபிளிக்ஸ் புதிய ஸ்ட்ரீமிங் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகளை மேற்கொண்டு வந்த நிலையில், புதிய கலாச்சார வழிகாட்டுதலை அறிவித்துள்ளது.

இந்த புதிய கல்ச்சுரல் கைடுலைன் மற்றும் அது சார்ந்த உள்ளடக்கத்துடன் (திரைப்படங்கள், வெப் சீரிச்கள் உள்ளிட்டவைக்கு) நெட்ஃபிளிக்ஸின் ஊழியர்கள் உடன்படவில்லை என்றால், அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என்று அறிவித்துள்ளது. நெட்ஃபிலிக்ஸ் தனது பார்வையாளர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்துள்ளது.

பார்வையாளர்களுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பது அவர்களே தீர்மானிக்கட்டும் என்ற விருப்பத்துடன், நெட்ஃபிலிக்ஸ்  சென்சார் சார்ந்த குறிப்பிட்ட கலைஞர்கள் மற்றும் வாய்ஸ்கள் என்ற இரண்டு தேர்வையும் வழங்குகிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நெட்ஃபிலிக்ஸ் "ஊழியர்கள் எங்கள் நிலையைப் புரிந்துகொள்வதற்கும், நெட்ஃபிக்ஸ் அவர்களுக்கு சரியான நிறுவனமா என்பது குறித்து சிறந்த தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கும் இது உதவும்" என்று கூறியுள்ளது.

Also Read : நெட்பிளிக்ஸ் இலவசமாக வேண்டுமா - ஏர்டெல்லின் அசத்தலான 2 பிளான்கள்

மேலும், ஊழியர்களின் ரோலுக்கு ஏற்ப, ஆபத்தானது என்று நினைக்கும் ஸ்ட்ரீமிங்குகளின் தலைப்புகளை மாற்ற வேண்டும் என்றும், நிறுவனத்தின் பரவலான உள்ளடக்க தேர்வுகளை ஆதரிக்க முடியவில்லை என்றால், நெட்ஃபிலிக்ஸ் வேலை செய்ய ஏற்ற நிறுவனம் அல்ல என்று நிறுவனம் ஊழியர்களுக்குக் கூறியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் நெட்ஃபிளிக்ஸ் மேலும் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழக்கலாம் என்ற கணிப்பு வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இந்த மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்று நிறுவனம் செயல்பட்டு வருகின்றதாக தெரிகின்றது. மேலும், நெட்ஃபிளிக்சின் இந்த அதிரடி அறிவிப்புக்கு, ஆதரவாக உலகின் முதல் பணக்காரரான டெஸ்லா CEO எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Also Read : Netflix-ல் அதிரடி மாற்றங்கள் - யூஸர்களை தக்க வைத்து கொள்வதில் சிக்கல்?

விளம்பரங்களுடன் வழங்கப்படும் புதிய சந்தா திட்டங்களை பற்றி ஆலோசனை செய்து வருவதாக நிறுவனம் கூறியிருக்கிறது. எனவே இதை பற்றி உறுதியான முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.

Comments

Popular posts from this blog