விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்…


விக்ரம் படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ லிரிக்கல் வீடியோ நாளை ரிலீஸ்…


கமலின் விக்ரம் படத்திலிருந்து அடுத்த லிரிக்கல் வீடியோவாக போர்க்கண்ட சிங்கம் பாடல் வெளியாகவுள்ளது.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி கடந்த 15-ம்தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிடப்பட்டது.

ஏற்கனவே கமல் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் 1986ல் வெளிவந்து சாதனை படைத்தது. அதே டைட்டில் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா இடம்பெற்றுள்ளார்.

மல்டி ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளதாலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக ஹிட் படங்களைக் கொடுத்ததாலும் விக்ரம் படத்தின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க - விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ Book My Show இணையதளத்தில் விக்ரம் படத்தை பார்ப்பதற்கு 2 கோடிக்கும் அதிகமானோர் அதாவது 20 மில்லியனுக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் படிங்க - புதுப்பேட்டை 2ம் பாகம் உருவாகுமா? செல்வராகவன் பதில்

இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்த அப்டேட்டடாக, படத்திலிருந்து ‘போர்க்கண்ட சிங்கம்’ பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகவுள்ளது.

ஏற்கனவே விக்ரம் படத்திலிருந்து வெளியான கமல்ஹாசன் பாடிய பத்தல பத்தல லிரிக்கல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகவுள்ளது.

விக்ரம் படத்தின் முன்பதிவு காட்சிகளுக்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் விக்ரம் படத்தின் முன்பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit