மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவன்.. தடுக்க வந்த தந்தைக்கு கை துண்டானது


மனைவிக்கு டார்ச்சர் கொடுத்த வாலிபரை வெட்டிய கணவன்.. தடுக்க வந்த தந்தைக்கு கை துண்டானது


தஞ்சாவூரில் மனைவியை கிண்டல் செய்த வாலிபரின் தலையில் அரிவாளால் கணவன் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். சம்பவத்தை தடுக்க வந்த வாலிபரின்  தந்தையின் கை துண்டானது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் காவல் சரகம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித் (22) என்பவர் தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விஜயிடம் அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விஜய் பலமுறை அஜீத்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் அஜித் கிண்டல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விஜய்தனது  நண்பர் திவாகருடன் சேர்ந்து அஜித்திடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும்  தகராறு முற்றி கைகலப்பாகி உள்ளது.

அப்போது திவாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், அஜித்தின் நடுதலையில் வெட்டியுள்ளான், இதில் அஜித் பலத்த காயம் அடைந்துள்ளான்,  மகன் தாக்கப்படுவதை தடுக்க வந்த அஜித்தின்  தந்தை ராஜகோபாலனுக்கு  (48) வெட்டு விழுந்துள்ளது. இதில் அவரது இடதுகை மணிக்கட்டுடன் துண்டானது.  உடனடியாக அவர்கள் இருவரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ரூ.1,526 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு- குமரி மீனவர்கள் உட்பட 20 பேர் சிறையில் அடைப்பு


பின்னர் அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி தலைமறைவான விஜய் மற்றும் திவாகரையும்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit