பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது! முதல்வர் அதிரடி உத்தரவு!520076858


பெண்களுக்கு கட்டாய நைட் ஷிப்ட் கூடாது! முதல்வர் அதிரடி உத்தரவு!


உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலானபாஜகஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய உத்தரவை யோகி அரசு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச  தொழிலாளர் துறை வெளியிட்ட உத்தரவில், பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணிக்கு மேல் அதிகாலை 6 மணிக்குள் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதற்கு அனுமதி கிடையாது. . விருப்பத்தின் பேரில் வேலை செய்யலாமே தவிர அவர்களை பணிசெய்யும் நிறுவனம் கட்டாயப்படுத்த முடியாது.

அதேபோல், இந்த உத்தரவை காரணம் காட்டி இரவு பணி வைத்திருக்கும் பெண் தொழிலாளர்களை நிறுவனங்கள் வேலை நீக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.  விருப்பத்தின் பேரில் இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதிய பாதுகாப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மில் மற்றும் தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கிய கவனத்தை வழங்கி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் சீரான சட்டம் ஒழுங்கு வழங்கியதாகக் கூறியே 2022ஆம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தது மீண்டும் 2ஆம் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களின் வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை புல்டோசர் வைத்து இடித்து தள்ளும் அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டது. இது போன்ற அதிரடி செயல்களுக்கு எதிர்ப்பு குரல் வந்தாலும், சட்டம் ஒழுங்கு கறாராக கடைப்பிடிக்க வேண்டும் என மறுபுறம் ஆதரவு குரலும் எழுந்து வருகிறது.

Comments

Popular posts from this blog