ரேஷன் கடைகளில் முக்கிய அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி! மக்கள் மகிழ்ச்சி!2109113044


ரேஷன் கடைகளில் முக்கிய அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி! மக்கள் மகிழ்ச்சி!


 

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி உறுதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

 

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

 

ஆய்வுகள்

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்த அறிவிப்புகள் சட்டசபைகளிலும், சில நேரம் அமைச்சர்களின் பேட்டிகளின் மூலம் வெளியாகிறது.. அந்த வகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

 

அமைச்சர் நம்பிக்கை

அதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளார் அமைச்சர்.. செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் அரிசி வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வருகின்றன.. ஆனால், சில இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளன.. முக்கியமாக, வயல்வெளியில் வேலை செய்யும் மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளன.. இந்தியாவில் பல மாநிலங்களில் கண் கருவிழி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

கண் கருவிழி கருவி

நம் தமிழகத்திலும் இதுபோலவே, கண் கருவிழி கருவி மூலமாகப் பொருள்கள் வாங்க ஏற்பாடு செய்ய உள்ளோம். இதற்காக, சோதனை முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்... இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயன்தரும் முறையில் இருந்தால், தமிழகம் முழுவதும் கண் கருவிழி கருவி மூலம் பொருட்களை வாங்க முடிவு செய்யப்படும்" என்றார் அமைச்சர்..

 

நாமக்கல் கூட்டம்

இதனிடையே, ரேஷன் கடை பணியாளா்கள் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆயத்தக் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது..

 

தனித்துறை

இந்த கூட்டத்தில், அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும், புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும், விடுமுறை நாள்களில் நகர்வுப் பணியை நிறுத்த வேண்டும், பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்கள் ரேஷன் கடைகளை முழு அடைப்பு செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ரேஷன் பொருட்கள்

மேலும் ஜூன் 10ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் அனைத்துத் துறை சர்ந்த பணியாளா்களும், கோரிக்கையை மீட்டெடுக்க வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு சென்னையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, மூன்று நாள்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில் ஜுன் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை 7ம் தேதிக்கு முன்பாக வாங்கிக் கொள்ள ரேஷன் அட்டைதாரர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog