என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை


என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை


விரேந்திர சேவாக், இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளையே மாற்றிப் போட்டவர், தலைகீழாக்கிய போஸ்ட் மாடர்ன் பேட்டர். ஆனால் இவரது கரியர் அப்படியே முடிந்தது, 8503 டெஸ்ட் ரன்களுடன் அவர் முடிந்தார், ஆனால் இந்தியாவின் 5-வது சிறந்த பேட்டர் என்று முடிக்கப்பட்டார்.

11 மாதங்களுக்கு என்னை ட்ராப் செய்யாமல் இருந்திருந்தால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்கிறார் சேவாக். 2001- சேவாகின் அறிமுக டெஸ்ட் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது,தென் ஆப்பிரிக்காவில் ப்ளூம்பவுண்ட்டைனில் இவரும் சச்சினும் தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், சேவாக் 105 ரன்கள் எடுத்தார். ஆனால் சேவாக் போன்ற வீரர்களையெல்லாம் பார்மை வைத்து எடைப்போடக்கூடாது, ரவிசாஸ்திரி ஒருமுறை சொன்னது போல் 10 போட்டிகளில் 3 போட்டிகளில் சேவாக் ரன்கள் எடுத்தால் கூட போதும் என்று அணியில் வைத்திருப்பதுதான் எதிரணியின் திட்டங்களையே மாற்றுவதைச் செய்ய முடியும் என்றார்.

இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்கு சேவாக் அளித்த பேட்டியில், “திடீரென டெஸ்ட் அணியில் நாம் இல்லை என்ற எண்ணம் என்னை அறைந்தாற்போல் இருந்தது. என்னை மட்டும் அப்போது அணியை விட்டு நீக்காமல் இருந்திருந்தால் டெஸ்ட் அணியில் நீடித்த்திருந்தால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்றார்”

சேவாக்கை அப்போது டிராப் செய்தது 2007-ல் ராகுல் திராவிட் கேப்டன்சியில், கிரெக் சாப்பல் பயிற்சியாளர். அதாவது சேவாக் 52வது டெஸ்ட்டை ஆடி முடித்தவுடன் ட்ராப் செய்யப்பட்டார், அதன் பிறகு 11 மாதங்கள் சென்று ஆஸ்திரேலியாவில் பெர்த் டெஸ்ட்டுக்குத் திரும்புகிறார் இந்தியா அந்த டெஸ்ட் போட்டியில் கும்ப்ளே தலைமையில் வெல்கிறது, அடுத்து அடிலெய்டில் சேவாக் மிகப்பிரமாதமான 155 ரன்களை எடுத்தார். ஒரு செஷனில் பவுண்டரியே அடிக்காமல் சேவாக் ஆடியது ஆஸ்திரேலியர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

2006-07 தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகு சேவாக் ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடினார். அப்போது அவர் ரிட்டையர் ஆகி விடலாம் என்று நினைத்த போது சச்சின் டெண்டுல்கர்தான் அவரை ரிட்டையர் ஆகாதே என்றார். சச்சின் அட்வைஸ் சேவாகுக்கும் பயனளித்தது இந்திய ரசிகர்களுக்கும் குதூகலம் ஊட்டியது ஏன் தெரியுமா அதன் பிறகுதான் சேப்பாக்கத்தில் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்து 319 ரன்களை எடுத்தார், அந்த முச்சதம் 274 பந்துகளில் எடுக்கப்பட்டு உலக சாதனையாக இன்று வரை உள்ளது. அதன் பிறகு இலங்கைக்கு எதிராக 3வது முச்சதத்தை எடுத்திருப்பார் ஆனால் 293 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் 165, நாக்பூரில் 109 என்று ஐசிசி ரேங்கிங்கில் நம்பர் 1 நிலைக்கு முன்னேறினார் சேவாக். அவர் வேதனையடைவது நியாயம்தானே.

Comments

Popular posts from this blog