தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தனுஷின் ரசிகர்கள் ட்ரெய்லரால் உற்சாகம் அடைந்துள்ளனர். கர்ணன் படத்திற்கு பின்னர் வெளிவந்த தனுஷின் மாறன், ஜெகமே தந்திரம், அந்த்ராங்கி ரே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தனுஷின் ரசிகர்கள் உள்ளார்கள். நேற்று வெளியான தனுஷின் கேரக்டர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டுள்ளது. அதில் தனுஷுக்கு Lethal Force என்ற அடைமொழி கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் தனுஷுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று தி கிரே மேன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ட்ரெய்லரின் 1:22 வது நிமிடத்தில் தனுஷின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியா...
கார்த்தியின் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… போலீஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அவருக்கு பிறந்தநாள் வரும் நிலையில் அதற்கு வாழ்த்துச் சொல்லும் விதமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கார்த்தி, தயாரிப்பாளர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தொடர்ச்சியாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அவற்றில் சர்தார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தப் படத்தில் திறமையான உளவுத்துறை ஏஜென்ட் மற்றும் போலீஸ் என 2 கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். இதையும் படிங்க - தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் தனுஷின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு… இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் ஹீரோ பட சறுக்கலுக்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்குனம் படம் என்பதால் சர்தார்...
Comments
Post a Comment