பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக் காலமானார்!


பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக் காலமானார்!


பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா, வயோதிகம் காரணமாக உடல்நலம் குன்றி காலமானார். 

பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக் (92) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி, சிகிச்சை எடுத்து வந்தார். 

 

இந்நிலையில், உடல் நலம் மிக மோசமடைந்ததையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். 

அவரது உடல் மும்பை, சிவாஜி பூங்காவில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்தி, மராத்தி  உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிகை வத்சலா தேஷ்முக் நடித்துள்ளார். வத்சலா தேஷ்முக்கின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

நடிகை வத்சலா தேஷ்முக் நடித்த நாக் பஞ்சமி, ஜல் பின் மச்சிலி உள்ளிட்ட மராட்டி  மொழி திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியை விட மராட்டி மொழி திரைப்படங்களில் நடிகை வத்சலா தேமுக்கின் பங்கு அளப்பரியது.

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்