மறைந்தாலும் மறையாது பாசம் தாய்மாமாவுக்கு சிலை அமைத்து மடியில் அமரவைத்து காது குத்து: ஒட்டன்சத்திரத்தில் நெகிழ்ச்சி


மறைந்தாலும் மறையாது பாசம் தாய்மாமாவுக்கு சிலை அமைத்து மடியில் அமரவைத்து காது குத்து: ஒட்டன்சத்திரத்தில் நெகிழ்ச்சி


ஒட்டன்சத்திரம்: இறந்து போன தாய்மாமாவுக்கு சிலை அமைத்து, மடியில் குழந்தைகளை அமர வைத்து நடந்த காது குத்து விழா ஒட்டன்சத்திரத்தில் காண்போரை நெகிழ செய்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி - பசுங்கிளி தம்பதி மகன் பாண்டித்துரை. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் இறந்து விட்டார். பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினி. இவரது மகள் தாரிகாஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன். இவர்களது காதணி விழா நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. தாய்மாமா பாண்டித்துரையின் சிலை முன் காது குத்துவது என முடிவு செய்தனர்.

இதையடுத்து பாண்டித்துரையின் சிலிக்கான் உருவச்சிலை பெங்களூருவில் ரூ. 5 லட்சம் செலவில் தத்ரூபமாக செய்யப்பட்டது. தாய்மாமனுக்குரிய செய்முறைப்படி சிலைக்கு பட்டு வேட்டி, நகைகள் அணிவித்தனர். தொடர்ந்து, குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சிலை ஊர்வலமாக மண்டபம் வரை சிலை எடுத்து வரப்பட்டது. பின்னர் சிலையின் மடியில் குழந்தைகள் தாரிகாஸ்ரீ, மோனேஷ் குமரனை அமர வைத்து காது குத்தப்பட்டது. தாய்மாமாவை போலவே அசலாக சிலை செய்து, நடந்த காதணி விழா ஒட்டன்சத்திரம் பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

Tags:

Disappears never fades affection motherhood idol ear piercing ottanchatram மறைந்தாலும் மறையாது பாசம் தாய்மாமா சிலை காது குத்து ஒட்டன்சத்திரம்

 

Comments

Popular posts from this blog