Beast Release: வெளியானது விஜய்யின் பீஸ்ட் வெளியீட்டு தேதி!


Beast Release: வெளியானது விஜய்யின் பீஸ்ட் வெளியீட்டு தேதி!


நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அதிராகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

இதைத்தொடர்ந்து பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் காதலர் தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. தற்போது வரை இந்தப் பாடல் யூ-ட்யூபில் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடல் வெளியானது. விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாத்ரூம் இல்லாம அவதிப்பட்டேன் - குக் வித் கோமாளி புகழிடம் தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!

இதையடுத்து பீஸ்ட் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்