பான், ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31 கடைசி நாள்!
பான், ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 31 கடைசி நாள்!
இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் வருமான வரித் தாக்கல் செய்யும் போது பான் கார்டு அவசியமானதாகும். தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பான் – ஆதார் இணைப்பு:
இந்தியாவில் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி தான் அரசின் அனைத்து சேவைகளும் பெற முடிகிறது. தற்போது ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்துவது, சிலிண்டர் பெறுவது, வருமான வரி தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இதையடுத்து ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான கால அவகாசம் வருகிற மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்கு முன்னதாக இதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை வழங்கப்பட்டது. மேலும் இவ்விரண்டு ஆவணங்களையும் இணைப்பதற்கு கட்டாயமான ஒன்று இரண்டு ஆவணங்களிலும் பெயர், வயது, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஒரெ மாதிரியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. Income Tax e-filing என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களின் விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
2. இதையடுத்து OTP எண்ணை கொடுத்து வெரிஃபிகேஷன் முடிக்க வேண்டும். இப்போது பான் கார்டு குறித்த விவரங்களை கொடுத்து பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். இதையடுத்து மீண்டும் தங்கள் கணக்கில் LOGIN செய்ய வேண்டும்.
3. இப்போது ஆதார்-ஐ இணைப்பதற்கான லிங்க் Link Aadhaar கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதனை தேர்வு செய்த பிறகு புதிய பக்கம் தோன்றும்.
4. இதில் பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும். அடுத்ததாக கேப்சா கோடை கொடுக்க வேண்டும்.
5.இறுதியாக லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்த வேண்டும். இப்போது தங்களின் இரண்டு ஆவணங்களும் இணைக்கப்பட்டு விடும்.
Comments
Post a Comment