குழந்தை உள்பட லிஃப்டில் சிக்கிய பயணிகள்...2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!!


குழந்தை உள்பட லிஃப்டில் சிக்கிய பயணிகள்...2 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு!!


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் பரபரப்பாக எப்போதும் போல நேற்று காணப்பட்ட நிலையில் லிஃப்டில் 13 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் கூடுதல் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் லிஃப்டில் நேற்று மாலை குழந்தை உட்பட 13 பேர் சிக்கிக் கொண்டனர்.  மின்தூக்கி லிஃப்ட் பழுதானதால் நடுவில் சிக்கிக் கொண்ட நிலையில் உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல்துறையினர் மற்றும் தொழில்நுட்பக் குழு வந்தது. லிஃப்டை இயக்க மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில்,  தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

 

இதையடுத்து லிஃப்டில் மேல் பகுதியில் இருந்த மின் விசிறி அகற்றப்பட்ட நிலையில்,  கயிறு கட்டி முதலில் பெண் குழந்தையை வெளியில் தூக்கினர் . இதையடுத்து ஒருவர் பின் ஒருவராக லிஃப்டில் இருந்து மீட்கப்பட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லிஃப்டில் சிக்கிக்கொண்ட 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

நல்வாய்ப்பாக லிஃப்டில் சிக்கியிருந்த எவருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.  லிஃப்டை இயக்கவோ அல்லது அதை பராமரிக்கவோ  பணியாளர்கள் உள்ளதால் அது பழுதாகி இருக்கலாம் என பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

மிதுனம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) - Midhunam Rasipalan.  941633125

100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்திற்கு...கடும் கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்...

தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ ட்ரெய்லர் வெளியீடு… உற்சாகத்தில் ரசிகர்கள்